Since 1998 — The First Tamil Holy e-Bible

சங்கீதம் 124 அதிகாரம்

Tamil Bible · சங்கீதம் · Chapter 124 of 150
சங்கீதம் 124
1
மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது, கர்த்தர் நமது பக்கத்திலிராவிட்டால்,
A Song of degrees of David. If it had not been the LORD who was on our side, now may Israel say;
2
கர்த்தர் தாமே நமது பக்கத்திலிராவிட்டால்,
If it had not been the LORD who was on our side, when men rose up against us:
3
அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்.
Then they had swallowed us up quick, when their wrath was kindled against us:
4
அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,
Then the waters had overwhelmed us, the stream had gone over our soul:
5
கொந்தளிக்கும் ஜலங்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக.
Then the proud waters had gone over our soul.
6
நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
Blessed be the LORD, who hath not given us as a prey to their teeth.
7
வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.
Our soul is escaped as a bird out of the snare of the fowlers: the snare is broken, and we are escaped.
8
நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது.
Our help is in the name of the LORD, who made heaven and earth.